Ammavin Magal/அம்மாவின் மகள்- Rakesh Kanyakumari/ராகேஷ் கன்யாகுமாரி

Ammavin Magal/அம்மாவின் மகள்- Rakesh Kanyakumari/ராகேஷ் கன்யாகுமாரி

Regular price Rs. 220.00
/

Only -3 items in stock!
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் நமக்கு நம் அம்மாவை பற்றி உண்மையில் எதுவுமே தெரியாது...!?! அம்மாக்களின் வாழ்க்கைப் பக்கங்கள் மீது ஏன் பெரிய அளவில் சொந்த பிள்ளைகளுக்குக் கூட ஆர்வம் இருப்பதேயில்லை? நம் அம்மாவும் பல அவமானங்களை, சில காதல்களை, சொல்ல முடியாத ஏக்கங்களை, திரும்ப ஒருமுறை யோசிக்கவே கூட விரும்பாத துர்நாட்களைக் கடந்து வந்துதானே நம்முடன் காலத்தை கடத்திக் கொண்டிருப்பாள். ஒரு சிறிய பெண்ணாக மின்னும் கண்களுடன் பட்டுப் பாவாடை கட்டி, துறுதுறுவென்று ஓடியாடி, பிடிக்காத சாப்பாட்டை அவளது அம்மாவிடம் வேண்டாம் என்று அடம்பிடித்து... வளர்ந்த நம் அம்மா ஏதோவொரு நொடியில் நிகழும் திருப்பங்களில்... வாழ்க்கைப் பயணத்தில் நம்மைச் சந்திக்க நேர்ந்ததும்... நாம் அவளோடு பயணிக்கவும் தொடங்கியதுமான நாட்களை நோக்கிய மீள்பார்வையே இந்நாவலின் களம்.
இந்நாவல் 1990-க்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த காலகட்டத்தில், சுய விருப்பு வெறுப்புகள் மறுக்கப்பட்ட எத்தனையோ தாய்மார்களில், எங்கோ ஒரு தாய், தான் கடந்து வந்த வாழ்வை பற்றிய மீள்பார்வை எனக் கொள்ளலாம். குழந்தையாகத் தொடங்கிய நாட்கள் முதல், ஒரு அம்மாவாக நாற்பதுகளின் தொடக்க காலம் வரைக்கும் அவள் எப்படிப் பயணித்தாள் என்பதை ரத்தமும், சதையுமாக அறிந்துகொள்ள வேண்டி குறுக்குவெட்டாக ஒளியைப் பாய்ச்சி பார்க்கின்ற ஒரு சிறிய முயற்சி.
எந்தவொரு அம்மாவையோ அல்லது பெண்களையோ பாராட்டுக்குக் கூட சுயம்பு என யாரும் சொல்வதில்லை. ஒவ்வொரு அம்மாவும் தினம் தினம் ஒரு சுயம்பாக அவதரித்த கதையைத் தான் இந்நாவல் பேசுகிறது.