Paalvannam/பால்வண்ணம் -K.S.Suthakar/கே.எஸ்.சுதாகர்
Regular price Rs. 190.00
/
கே.எஸ். சுதாகரின் கதைகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க அம்சம் வடிவ நேர்த்தி! கதைகளைக் கட்டமைப்பதில் அவர் வல்லவராக இருக்கிறார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக பால்வண்ணம், கலைந்த கனவு, பாம்பும் ஏணியும் ஆகிய கதைகளைக் குறிப்பிடமுடியும். இவற்றுள் பால்வண்ணம், கலைந்த கனவு ஆகிய கதைகள் உளவியல் பாங்குடைய சிறுகதைகளாகவும் அமைந்துள்ளன.
தெளிந்த நீரோட்டம் போன்று அநாயாசமாகக் கதைகளை நகர்த்திச் செல்லும் ஆசிரியரின் திறனும் அவரது சிறந்த மொழிநடையும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.
ஒரு மலர்மாலையில் பல்வேறுபட்ட நிறமும் மணமும் கொண்ட பூக்கள் தொடுக்கப்பட்டிருப்பது போன்று, இத் தொகுப்பில் பல்வேறுபட்ட கருவும் உருவும் கொண்ட கதைகள் தொகுக்கப்பட்டிருப்பது வாசகரது இரசனைக்கு நல்விருந்தாக அமையும்.
- தி. ஞானசேகரன்