Naanum en poonaikuttigalum/நானும் என்  பூனைக்குட்டிகளும்-Dharani Rasendran/தரணி ராசேந்திரன்

Naanum en poonaikuttigalum/நானும் என் பூனைக்குட்டிகளும்-Dharani Rasendran/தரணி ராசேந்திரன்

Regular price Rs. 150.00
/

Only 1000 items in stock!
நானும் என் பூனைக்குட்டிகளும் படிக்கும்போது பல இடங்களில் என் கண் கலங்கியது. என்னை மிகவும் பாதித்த கதை.
-சாரு நிவேதிதா.

தரணி ராசேந்திரனின் சொந்த அனுபவம் மற்றும் நகரத்தின் இருளடர்ந்த சாலைகளில் கண்கள் மின்ன சுற்றித்திரியும் உயிர்களின் மீதான கவனம் மற்றும் அக்கறையின் பேரில் அன்பும் கோபமும் கொண்ட மனிதராகிறார். அன்பு அரவணைப்பு அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான தடைகளுக்கு எதிரான கோபம் உப்புக்காற்றின் ஈரப்பதத்துடனும் உலர்ந்து வறண்டு வீசும் வெப்பக்காற்றின் தகிப்புடனும் வெளிப்படும். நானும் என் பூனைக்குட்டிகளும் நூலை வாசிப்பவர்கள் இந்த அனுபவத்தைப் பெறுவார்கள்,
யதார்த்தவாத இலக்கியமாகக் கருதப்பட வேண்டிய நாவலில் வரும் பூனைகளின் பேச்சும் அவற்றின் அதிகாரக் குரலும் மாயவாத இலக்கியத்திற்கான தளத்திற்கு இட்டுச்சென்று புனைவின் சுவையைக் கூட்டுகிறது.
- மு. சந்திரகுமார்.

உலகமெங்கும் இலக்கியங்கள் மனித மாண்புகளை, காதலை, துயரை, போராட்டத்தை, வீரத்தை, வரலாற்றைப் பற்றித் தொடர்ந்து பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்டு வருகிறது. எப்போதேனும் அதிசயமாக விலங்குகளைப்பற்றி தமிழ்ச் சூழலில் மிக அரிது. அதிலும் நானும் என் பூனைக்குட்டிகளும் என்கிற இந்தப் புதினம் மிக அரிதான வியப்பான சிறப்பான ஒன்று.
-கரன் கார்கி.

அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்,
-உமா ஷக்தி.