355 products
355 products
355 products
Muththollaayiram/முத்தொள்ளாயிரம் - N.Chokkan/என்.சொக்கன்
Regular price Rs. 310.00
Megangalin Pethi/மேகங்களின் பேத்தி - Seenu Ramasamy/சீனு ராமசாமி
Regular price Rs. 210.00
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை இவரது கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை. ஒரு நல்ல கவிதை, தன்னை வாசிப்பவர்களை, அவர்களது வழக்கமான இடத்திலிருந்து நகர்த்திச் செல்கிறது. அவர்கள் இருளில் இருந்தால், ஒளியை நோக்கியும், அவர்கள் சந்தடியிலிருந்தால் விசாலமான - காற்றோட்டமான இடம் நோக்கியும் நகர்த்துபவை. சீனு ராமாசாமியின் கவிதையோடு நகர்பவர்கள் ஒரு நாகரிக சமூகத்துக்கு இடம் பெயர்கிறார்கள். முந்தைய அவரது தொகுப்புகள்போலவே, ‘மேகங்களின் பேத்தி' தொகுப்பின் கவிதைகளும் செயல்படுகின்றன.
- கவிஞர் கரிகாலன்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை நிலைப்படுத்திக்கொண்டவர் சீனு ராமசாமி. ‘ஆக் ஷன்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதிப்படி செயல், நடவடிக்கை, நடிப்பு என்ற பொருள்கள்தான் உண்டு. ஆனால், திரையகராதியில் அடிதடி, அதிரடி என்ற அர்த்தங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த இலக்கணத்துக்கு அடங்க மறுத்து, அமைதியான நீரோட்டத்தின் பேரலைகளை உணரச் செய்யும் படங்கள் சந்தையிலும் வெற்றி காண முடியுமெனச் செய்துகாட்டிய முதன்மை இயக்குநர்களில் ஒருவர் இவர். அந்த நீரோட்டத்துக்கே உரிய சில்லென்ற புத்துணர்ச்சியை, புதிரான ஆழத்தைத் துய்ப்பதற்கு இந்நூலின் ஒவ்வொரு கவிதையும் பாதையமைக்கிறது.
- அ. குமரேசன்,
மேனாள் பொறுப்பாசிரியர், தீக்கதிர் நாளிதழ்
Inspector Shenbagaramanum Thiruvallikkeni Tasmackum/இன்ஸ்பெக்டர் செண்பகரமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும் - Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 150.00
வார்த்தைக்கு வார்த்தை தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று சொல்லிக்கொண்டிருக்கும் அப்பா இப்போது மகன் பேச்சைக் கேட்டு ராஸ்கலை வளர்ப்பது பற்றி அதிகமாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், அகிதா இனு ஜாதி நாய்கள் மிகவும் அபாயகரமானவை. யாராவது வீட்டுக்குள்ளே வந்தால் குதறித் தள்ளி விடும். சில நாடுகளில் அகிதா இனு நாய் வளர்ப்பதைத் தடை செய்து வைத்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட அகிதா இனு நாயை ஒரு இதய நோயாளியான அப்பா வளர்ப்பதும் மானுட வாழ்வின் அபத்தங்களில் ஒன்றுதானோ? சரி, கடைசியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். இப்போது எனக்கு எட்டு வயதாகிறது. இன்னும் ரெண்டு வருஷமோ மூணு வருஷமோ. சாகும் வரை எனக்குப் பிடித்த உணவுப் பலகாரங்களைத் தின்றுகொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. தனிமனித சுதந்திரம் பற்றி எவ்வளவோ எழுதும் மை டியர் அப்பா, நாய் சுதந்திரத்தையும் கொஞ்சம் பேணக் கூடாதா? எனக்கு இட்லிதான் உயிர். ஆனால் இட்லியை யாரும் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். சாப்பிடுவதைக்கூட ஒளித்து ஒளித்துதான் சாப்பிடுகிறார்கள். இது முறையா, தர்மமா, சொல்லுங்கள்.
- நூலிலிருந்து...
Voltairai Eppadi Naam Kaidhu Seyya Mudiyum/வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்? - Charu Nivedita/சாரு நிவேதிதா
Regular price Rs. 180.00
நூறு முறை சொன்ன உதாரணத்தை மீண்டும் சொல்கிறேன். எம்.கே.டி. பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். கொலைக் கேஸில் ஜெயிலுக்குப் போய் வந்தார். புகழும் போனது. பணமும் போனது. கண் பார்வையும் போய் விட்டது. ஒரு காலத்தில் அவர் பாட்டைக் கேட்க மரக்கிளைகளிலும் விளக்குக் கம்பங்களிலும் நிற்பார்கள் மக்கள். அப்படி நின்று மின் அதிர்ச்சியில் செத்திருக்கிறார்கள். அவர் வந்தால் சமையலை அப்படியே போட்டு விட்டு ஓடுவார்களாம் பெண்கள். அப்பேர்ப்பட்டவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கண் பார்வை இல்லாமல் உட்கார்ந்திருந்த போது யாரோ பிச்சைக்காரன் என்று நினைத்து ஒருவர் காசு போட்டிருக்கிறார். கருங்கல் தரையில் விழுந்த அந்த நாணயத்தின் ‘ணங்’ என்ற சப்தம் பற்றி மனம் குமுறி அழுதிருக்கிறார் எம்.கே.டி. என் காதிலும் அந்த ‘ணங்’ என்ற சப்தம் என் ஆயுள் உள்ளளவும் கேட்டுக் கொண்டே இருக்கும். நடிப்பினால் வரும் புகழ் அப்படித்தான் முடிவுறும். அப்படிப்பட்ட தொழிலின் மீதா நான் ஆசைப்படுவேன்?
- நூலிலிருந்து...
Man Makkal Mannan/மண் மக்கள் மன்னன்-C.Saravanakarthikeyan /சி.சரவணகார்த்திகேயன்
Regular price Rs. 260.00
கம்ப ராமாயணத்தை நவீன, இளம் சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் முயற்சி இது. சிடுக்கான செய்யுள்களை எளிய சிறுகவிதைகளாக வனைந்திருக்கிறது இந்நூல். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியை மொழியின் வசதி கொண்டே நிரப்பி இருக்கிறார் உரையாசிரியர். பால காண்டத்தின் முதல் ஆறு பகுதிகளான பாயிரம், ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம் ஆகியன அடங்கிய இதில் கற்பனை வீச்சும், செறிந்த மொழியும் கொடிகட்டிப் பறக்கின்றன. பண்டைய பாரதத்தின் மண், மக்கள் மற்றும் மன்னன் பற்றி மிக விரிவாகப் பேசும் இப்புத்தகத்தில் ஆன்மீகம் என்பது இரண்டாம் பட்சம்தான். எனவே இந்து சமூகம் மட்டுமின்றி, மாற்று மதத்தோரும் கடவுளை நம்பாதோரும் கூட இதை வாசிக்கலாம்.
Salam/சலம்-Pa.Raghavan/பா.ராகவன்- Hardcover
Regular price Rs. 1,200.00
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது.
வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி.
‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்கக் கூடிய காரணங்களைத் தனது அடித்தளமாக அமைத்துக்கொண்டு கற்பனையில் ஒரு நதிக்கரை நாகரிகத்தினை உருவாக்கிக் காட்டுகிறார் பா. ராகவன்.
இன்றைய இந்தியாவில் உயிருடன் வாழும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எது தொடக்கமோ, அதன் வேர்களை இந்நாவல் ஆராய்கிறது.
Salam/சலம்-Pa.Raghavan/பா.ராகவன்- Paperback
Regular price Rs. 1,000.00
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது.
வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி.
‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்கக் கூடிய காரணங்களைத் தனது அடித்தளமாக அமைத்துக்கொண்டு கற்பனையில் ஒரு நதிக்கரை நாகரிகத்தினை உருவாக்கிக் காட்டுகிறார் பா. ராகவன்.
இன்றைய இந்தியாவில் உயிருடன் வாழும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எது தொடக்கமோ, அதன் வேர்களை இந்நாவல் ஆராய்கிறது.
Aravaan/அறவான்- Soumya/சௌம்யா
Regular price Rs. 220.00
இவை அன்பு வயப்பட்ட கதைகள், அதே சமயம் அறத்தின் பாற்பட்ட கதைகள். காதல், கல்யாணம், கள்ளம் என மும்முனையிலும் முயங்கி இயங்கும் ஆண் - பெண் உறவுச் சிடுக்குகள், பட்டு வஸ்திரம் ஒன்றைத் தறியில் நூல் நூலாகக் கோத்து நெசவு செய்து எடுப்பது போல் இந்தப் புனைவாக்கங்களில் நேர்த்தியாகச் சேகரமாகி இருக்கின்றன. நல்லதுக்கும் அல்லதுக்குமான தீராச் சமர் அவற்றில் ஊடுபாவாக இழையோடுகிறது. எப்போதும் தீமையின் கண் கூசும் வெளிச்சம் விட்டில் பூச்சிகள் விரும்பி விழுமளவு வசீகரமானதுதான். ஆனால் அறத்தின் சிற்றொளியே மானுடத்தை வழிநடத்துகிறது. அதை அணையாது உள்ளங்கைக்குள் பொத்திக் காக்க எத்தனிக்கின்றன இக்கதைகள்.
Edinburgh Kuripppugal/எடின்பரோ குறிப்புகள்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 140.00
எடின்பரோ - ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப், தட்கா தால், பிண்டி சப்ஜி, மொகலாய் பிரியாணி வகையறா தான் மொத்த இந்தியாவிலும் மக்கள் சாப்பிடும் உணவு என்று அடம்பிடித்து ஊரை உலகத்தை நம்ப வைக்கிற வகை. இந்த ரெஸ்டாரண்ட்காரர்கள் தொண்ணூறு சதவிகிதம் பங்களாதேஷ்காரர்கள்.
வைக்கோல் சந்தை பகுதியில் (ஹே மார்க்கெட்) டால்ரி தெருவில் நீள நடந்தால், ‘வெராந்தா’ என்று ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே கிளிண்ட் ஈஸ்ட்வுட் புகைப்படம். இங்கே பலதடவை வந்து பிரியாணி சாப்பிட்டுப் போயிருக்கிறாராம் அவர். ஸ்காட்லாந்துக்காரரான ‘ஜேம்ஸ்பாண்ட்’ புகழ் ஷான் கானரி வந்து சப்பாத்தி சாப்பிட்டிருக்கிறாரா என்று விசாரித்தேன். முன்னொரு காலத்தில் எடின்பரோவில் சாமானியமான பால்காரராக இருந்து அப்புறம் சூப்பர் ஸ்டாராக மாறிய ஷான் கானரி ஸ்காட்லாந்தில் தங்குவதே அபூர்வமாம்,
வெராந்தா ஓட்டல் மெனு கார்டில் பத்தாவது ஐட்டம் ‘மதராஸ் சாம்பார்’. படுகுஷியாக ஆர்டர் செய்தால் திட பதார்த்தமாக ஒரு வஸ்து சுடச்சுட மேசைக்கு வந்து சேர்ந்தது. ஓட்டல் சமையல்காரர்கள் முன்னே பின்னே மதராஸையும் பார்த்ததில்லை, சாம்பாரையும் பார்த்ததில்லை என்பதால் உத்தேசமாகச் செய்து ஒப்பேற்றிய சமாச்சாரம் அந்த சாம்பார். அது வயிற்றுக்குள் ரொம்ப நேரம் அமர் சோனார் பங்க்ளா என்று பெங்காலியில் உரக்கப் பாடிக்கொண்டிருந்தது.
Edho Oru Pakkam/ஏதோ ஒரு பக்கம்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 200.00
Vaadhavooran Parigal/வாதவூரான் பரிகள்-Era.Murugan/இரா. முருகன்
Regular price Rs. 100.00
ஓரான் பாமுக்கின் ‘இஸ்தான்புல்’ அல்புனைவு நூல் படிக்கக் கிடைத்தது. இஸ்தான்புல் நகரின் அழகை உயர்த்திக் காட்டும் டான்யூப் நதிக்கரைக்கு புத்தகம் நகர்கிறது. கரையோரம் நடக்கும் எழுத்தாளர் பழைய நினைவுகளை அசைபோடும்போது அங்கே கூவிக்கூவி சிறு வியாபாரிகள் விற்கும் காகித அல்வா வாங்கி உண்டதை நினைவு கூர்கிறார்.
எனக்கு அங்கே கொறிக்க காகித அல்வா கிடைத்தது. காகிதத்தைப் போட்டு அல்வா கிண்டித் தின்ன முடியுமா? அல்லது, நம்ம கோழிக்கோடு மிட்டாய்த்தெரு இனிப்புப் பலகாரக் கடைகளில் கோழிக்குஞ்சு எசென்ஸ் ஊற்றிக் கலந்து கோழி அல்வா செய்து பரபரப்பான விற்பனையில் இருப்பது மாதிரியா இந்த அரேபிய இனிப்பு?
பேப்பர் அல்வா என்பது மெல்லிய தகடுகளாக அல்வாத்துண்டைச் சீவி இரண்டு தகடுகளுக்கு நடுவே இனிப்பு மாவாவோ உலர்திராட்சை, பாதாம்பருப்போ இட்டுத் தருவது என்று ஒரு சாரார் சொல்ல, அது வேபர் அல்வா, எனில், பொறுபொறுவென்று வறுவல் மாதிரியான பிஸ்கட்டுக்கு நடுவே அல்வா வைத்துத் தின்னத் தருவது என்று இன்னொரு குழுவினர் அபிப்பிராயப்படுகிறார்கள்.
Yakutsk Kaidhi/ யகுட்ஸ்க் கைதி - Shreyas Bave/ஷ்ரேயாஸ் பவே
Regular price Rs. 520.00
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்... அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று?
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விபத்தில் அவர் இறந்தாரா, மறைந்துபோனாரா? அவரைப் பற்றி அறிந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் காணாமல் போனதில் ஏதேனும் செய்தி இருக்கிறதா? சர்வதேச போலீஸிலிருந்து ரஷ்ய உளவுத்துறைவரை இந்த விவகாரத்தில் செய்த திரைமறைவு வேலைகள் என்னென்ன? உலகின் பல்வேறு நாடுகள் இதைத் தோண்டித் துருவுவதன் பின்னணி என்ன?
இன்னும் எத்தனை எத்தனையோ திகிலூட்டும் கேள்விகளுக்கான பதில்களை இந்த நாவல் ஒன்றோடொன்று பின்னி, எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியாது என்கிற விறுவிறு நடையில் சொல்கிறது. ஒரு நாட்டின் மாபெரும் தலைவரின் முடிவு மர்மமாக நீடிப்பதை இண்டு இடுக்கு விடாமல் ஆராய்கிறது இந்தப் புத்தகம். உங்கள் அறிவைச் சீண்டியபடியே எதிர்பாராத சம்பவங்களைக் கோத்து விவரிக்கும் இந்நூல் ஒரு முடிவை நோக்கி உங்களை நகர்த்துகிறது.
Manimegalai Part 2/மணிமேகலை பாகம் 2 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 290.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Nizhal Bommai/நிழல் பொம்மை - R.Abilash/ஆர். அபிலாஷ்
Regular price Rs. 540.00
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் தளத்தில் சிறைக் கொட்டடியிலோ காவல்துறையினரின் துப்பாக்கி முனையிலோ அதிகார மட்டத்திலோ நிகழ்வதல்ல, அது நமது அன்றாட வாழ்வினுள், அந்தரங்க நடத்தையில், சிந்தனையில் நுணுக்கமாகச் செயல்படுவது என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது. அன்பின், காதலின், கசப்பின், சுரண்டலின் அரசியலைப் பேசுகிறது. அரசியலையும் அதிகாரத்தையும் தத்துவத்தையும் ஒரே புள்ளியில் இணைத்து பாலியல் ஒழுக்கத்தை விசாரிப்பதன் வழியாகத் தமிழில் வெளிவந்த நாவல்களில் தனித்துவமானதாகிறது.
Katharkal/காதற்கள்-Sowmya/சௌம்யா
Regular price Rs. 280.00
காதலை முன்வைத்த குறுநாவல்கள் இவை. ஒன்று ஆணின் காதல் பற்றியது, மற்றது பெண் காதல் பற்றியது. எளிய வடிவம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் பயின்று வரும் அசலான உளப் போராட்டங்கள் இவற்றை வேறு தளத்துக்கு நகர்த்துகின்றன. குறிப்பாகப் பாத்திரங்களை அதனதன் நியாயங்களைப் பேச வைத்திருப்பது ஒரு விதப் பன்முகத்தன்மையை வழங்குகிறது. எத்தனை பேசினாலும் காதல் பற்றிய விஷயங்கள் மட்டும் நீர்த்துப் போவதோ தீர்ந்து போவதோ இல்லை. காதலை வியந்துகொண்டோ வெறுத்துக்கொண்டோதான் மனிதன் வாழ முடியும் - இரண்டுக்கும் மத்தியில் எளிதில் கடக்க முடியாது. அதையே இக்கதைகள் அடிக்கோடிடுகின்றன.
Appammai/அப்பாம்மை - Gayathri R/காயத்ரி ஆர்.
Regular price Rs. 120.00
சிந்தனை வரலாற்றில் உரையாடலை முக்கியப்படுத்தியவர்கள் இரண்டு பேர்: பிளேட்டோ மற்றும் ரூஸ்ஸோ.
உரையாடலின் மூலம்தான் ஒரு மொழியின் பேச்சு வழக்கு செயல்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கு என்பது குறிப்பிட்ட ஒரு இனம் அல்லது குழுவின் மொழி அடையாளம். அது மட்டும் அல்ல, இது அந்த இனம்
வாழும் நிலம்/இடம், அது சார்ந்திருக்கும் வர்க்கம் போன்றவற்றையும் அடையாளப் படுத்தக் கூடியது.
இந்தப் பின்னணியில் காயத்ரியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில்
உள்ள இரண்டு சிறுகதைகள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவை.
அக்கதைகளில் இடம் பெறும் உரையாடல்களின் மூலம் சென்ற தலைமுறையின் பேச்சு வழக்கு இலக்கியத் தகுதியைப் பெறுவதோடு
அல்லாமல் அத்தலைமுறையின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டு
விடுகிறது. நான் உதாரணங்கள் தரப் போவதில்லை. அதை வாசகரே
படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்பதால்.
Vilaiyaada Vandha Endhira Boodham/விளையாட வந்த எந்திர பூதம் - Perundevi/பெருந்தேவி
Regular price Rs. 120.00
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்கைக்கும் இடையே உள்ள சாத்தியங்களை மொழிக்குள் கொண்டுவர முயல்பவை இக்கவிதைகள்.
- ஹரி இராஜலெட்சுமி
Manimegalai Part 1/மணிமேகலை பாகம் 1 - A.Marx/அ.மார்க்ஸ்
Regular price Rs. 420.00
மணிமேகலைக் காவியத்திற்கு “மணிமேகலை துறவு” என்றொரு பெயருமுண்டு. மணிமேகலை துறவு மேற்கொண்டவர். அவரது அன்னை மாதவி ஒரு கணிகை. எனினும் மணிமேகலையின் தந்தை கோவலனின் மரணத்திற்குப் பின் துறவு மேற்கொண்டு அறவாழ்வு வாழ்ந்தவள். மணிமேகலையின் இன்னொரு (பெறா) அன்னையான கண்ணகியின் வரலாறை அறிவோம். கற்புக்கரசியாய் வாழ்ந்து, தன் கற்பின் வலிமையால் நீதியை நிலைநாட்டி மறைந்தவர் அவர். மணிமேகலையும் மாதவியும் துறவு மேற்கொள்கின்றனர். பருவ வயதின் ஈர்ப்புகளிலிருந்து அச்சிறுமி துறவுக்குரிய மேன்மை அடையும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை முன்வைக்கிறது மணிமேகலைக் காப்பியம்.
துறவென்பது என்ன? பற்றறுப்பு எனும் பொருளில் உடன்பாடில்லை. வேறென்ன? தன் குடும்பம், தன் பிள்ளை, பிதிர், பேத்தி என்பதாக அன்றி உலக மாந்தரையே வேறுபாடுகளின்றி உறவு
’ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகிக்
கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்…”
-என்பது மணிமேகலை.
Nallaangu/நல்லாங்கு - Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 300.00
நீ இல்லாமல் வாழவே
முடியாதென்பதெல்லாம்
பொய்
நீ இருந்தால்
இன்னும் நன்றாக வாழ்வேன்
அவ்வளவுதான்...
- நேசமித்ரன்
Manpuzhuvin Naangavadhu Idhayam/மண்புழுவின் நான்காவது இதயம்-Nesamithran/நேசமித்ரன்
Regular price Rs. 140.00
தொன்மத்தின் சடங்கு மொழியில் நவீன விஞ்ஞானத்தின் சூட்சுமங்களை
நேசமித்ரன் கவிதையாக்குகிறார். அவரது மொழி வேட்கையும்
உயிரினங்களின் மீதான அதீத உற்று நோக்கலும் உயிரினங்களின்
நடத்தைகளை கவிதை மொழியாக்குகின்றன. அதனால்தான் காதுகளே
வௌவாலின் கண்களாக நமக்குத் தெரிகிறது.
ஆகாயம் மற்றும் நிலத் தோற்றங்களின் மீது மொழி மண்புழுபோல் படிந்து
ஊர்கிறது. இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் புழுத்த
நம்பிக்கைகள் மற்றும் அற எல்லைகள் கடந்த கார்ப்பரேட் யுகத்தின்
வாழ்வுமுறைகள் சாட்சியமாகின்றன.
கவிதை என்பது ஒரு தனித்த துறையல்ல. பல்வேறு துறை சார்ந்த வாசிப்பு
அனுபவங்களிலிருந்து இவர் தமிழ் கவிதைகளுக்கான புதிய கலைச்
சொற்களை உருவாக்குகிறார். அவ்வகையில் நேசமித்ரன் கவிதைகள் தமிழ்
நவீன கவிதையின் விஸ்தரிப்பு.
- செல்மா பிரியதர்ஸன்
Bramai Kai/ பிரமைக் கை- Bogan Sankar/போகன் சங்கர்
Regular price Rs. 310.00
இந்தத் தொகுப்பில் பெரும்பாலானவை குறுங்கதைகள். குறுங்கதைகள் சமகாலத்தின் மிகச் சிறந்த வடிவமாக மேலெழுந்து வந்ததில் போகன் சங்கருக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்தக் கதைகள், குறுங்கதைகள் அடையக்கூடிய பல்வேறு விதமான சாத்தியங்களையும் அவை அடையக்கூடிய முழுமையையும் காட்டுகின்றன
Pinthodarthal/பின்தொடர்தல் - Manusha Prabani Dissanayake/மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
Regular price Rs. 150.00
‘மலரினும் மெல்லியது காதல்’ என்ற புரிதலுடன் கதையை விவரித்துள்ள மனுஷா ப்ரபானியின் எழுத்து, சமகாலப் பெண்ணிய எழுத்துகளில் தனித்துவமானது. மனதில் தோன்றும் மெல்லிய உணர்வுகளை அப்படியே மொழியில் பதிவாக்கிடுவது ஒருவகையில் சவால். மனுஷா ப்ரபானி நுட்பமான சொற்களில் பெண் மனதைச் சித்திரித்துள்ளார். காதல் என்ற உணர்வைப் பெண் மைய நோக்கில் விவரிக்கும் மனுஷா ப்ரபானி எழுதிய கதைகளில் இதுவரை பெண் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள புனைவுகள் நொறுங்குகின்றன. கதைகளை வாசிக்கையில் காதலர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியும், வேதனையும் ஏற்படுவது ஒருவகையில் விநோதம்தான். யதார்த்தத்தில் காதலர்களின் அனுபவங்கள், பிரதிகளின் வழியாகப் பதிவாகி, அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லப்படும் விநோதம் நிகழ்கின்றது.
- ந. முருகேசபாண்டியன்
Therthal Kadahigal/தேர்தல் கதைகள்-Alok Shukla/அலோக் சுக்லா
Regular price Rs. 200.00
சுதந்திரத்தை மதிக்கும் ஒவ்வொரு இந்தியனும் படிக்கவேண்டிய புத்தகம்.
உங்கள் ஆர்வத்தை ஈர்த்துப்பிடிக்கும் சிறுகதைகளின் இந்தத் தொகுதி வாழ்வின் உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தியாவின் தேர்தல் அரசியலில் நம்பமுடியாத நிகழ்வு என்பது மக்களை வீடுவீடாக சென்று சந்திப்பது. நூற்றாண்டுகளாக அந்நியர்களிடம் அடைமைப்பட்டுக் கிடந்த, ஏழ்மையான, வளரும் நாட்டில் தேர்தல் ஜனநாயகத்தின் வெற்றி. அது ஒரு அற்புதத்திற்கு இணையானது.
எழுபத்தைந்து சுதந்திர வாழ்க்கையைக் கடந்துவிட்டோம். இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் அந்த சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களாக இல்லை. தேர்தல் நடைமுறை என்பது மனிதனின் சுவாசத்தைப்போல வாழ்வின் ஒரு அங்கம். சுதந்திரமான, சமத்துவமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்திய அரசியலமைப்பு தனிப்பட்ட செயலதிகாரத்தை உறுதி செய்திருந்தும், இந்தியாவின் நீதி அமைப்புகள் அதில் தலையிட உரிமையில்லாதிருந்தும், தேர்தலை நடத்துவதற்கு எண்ணற்ற சவால்களை தேர்தல் ஆணையம் சந்திக்கிறது என்பதை ஒரு சிலர் அறிவார்கள்.
இந்தியாவில் தேர்தல் நடத்தப்படும்போது நிகழும் நிகழ்வுகளில் நம்மால் கொண்டாடப்படாத தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களின் பணிக்குப் பின்னே மறைந்து கிடக்கும் காட்சிகளையும் அவர்கள் சந்திக்கும் உன்னதமான சவால்களையும் இந்தப் புத்தகம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்தக் கதைகள் சாதாரண மக்களின் கதைகள். அவர்களுடன் பின்னிப்பிணைந்த இந்திய தேர்தல் ஆணைய பணியாளர்கள், பாதுகாப்புத் துறையினர், வேட்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், காவல்துறை, எல்லாவற்றுக்கும் மேலாக நம்புவதற்கரிய தைரியத்தை வெளிப்படுத்தியும் உலகின் மிகவும் சிக்கலான மற்றும் கடினமான தேர்தலான இந்தியத் தேர்தல் செயல்பாட்டுக்கான தூண்டுகோலாகவும் இருக்கும் இந்திய வாக்காளர்கள் ஆகியோரைப் பற்றிய கதைகள்.
மனிதனின் சுதந்திரத்துக்கான முடிவற்ற தேடலில் மனிதகுல எழுச்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறது இப்புத்தகம்.
Kazhi Odham/கழி ஓதம்- Ramya Arun Rayen/ரம்யா அருண் ராயன்
Regular price Rs. 170.00
'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்குள் உருவாகியுள்ள பன்னிரு உலகங்களுக்குள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நீங்கள் வாசித்துமுடிக்கும்போது உங்களுக்குள்ளும் அதுபோல நிகழ்ந்தால்... உங்களுக்குள் உருவாக்கும் உலகங்களும், எனக்குள் உருவாகும் உலகங்களும் என்றாவது சந்திக்க நேரலாம். அன்று நாம் நம் உணர்வுகளால் ஒருவரையொருவர் தரிசிப்போம்!
- ரம்யா அருண் ராயன்
Gethsemane/கெத்சமனி-Primya Crosswin/ப்ரிம்யா க்ராஸ்வின்
Regular price Rs. 190.00
கெத்சமனி எனப்படுவது, தனது சிலுவைப்பாடுகளின் முன்தினம், ஒரு பலவீனமான பொழுதில், எதிர்வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார் செய்யும்படியாக இயேசு பிரார்த்தனை செய்யச் சென்ற இடமாகும். முழுமையான துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஒருவன் தனக்குள் அடையும் உளைச்சலே கெத்சமனித்தருணம். எல்லாருடைய வாழ்விலும் இந்த கெத்சமனி பொழுதுகள் வந்து வந்துதான் செல்லும். ஒருவன் கெத்சமனிக்குள் பிரவேசிக்க அஞ்சினால் அவனுக்கு வாழ்தலும், மீட்பும் இல்லை. இப்புத்தகத்தின் கதை மாந்தர்கள் உங்களைத் தம் கெத்சமனித் தருணத்தினுள் அழைத்துச்செல்வர். எவர் மீதும் தீர்ப்பிடாமல், பிலாத்துவைப் போல, உங்களால் அவர்களைக் கைகழுவிவிட முடிந்தால் நலம்.
Ruskin Bond Sirukathaigal - 2 /ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள்-2
Regular price Rs. 560.00
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 500க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியுள்ளார். 1992ல் பத்மஶ்ரீயும், 2014ல் பத்மபூஷணும் வழங்கி நாடு அவரை கௌரவித்தது.
Alar/அலர்-Narayani Kannagi /நாராயணி கண்ணகி
Regular price Rs. 450.00
எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை.
வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிரீடமணியாது. ஆனால் எல்லாப் புழுக்களுக்கும் பசிக்கும். பசித்த புழுக்களுக்கு மகாராணியின் மாமிசமும் பரத்தையின் மாமிசமும் ஒரே ருசிதான்.
பசி வலியது. அதற்கான யுத்தம் கொடுமையானது. உடலின் தேவைக்கு யாரும் பரத்தையாவதில்லை. எரியம் குடலின் தீ நாக்குகளே வாழ்வை சமைக்கின்றன.
பெண்களை நம்பி எத்தனை வயிறுகள்
பெண்களை நம்பி எத்தனை உயிர்கள்
பெண்களை நம்பி எத்தனை பாவங்கள்
மகேஸ்வரி ஒரு பருக்கை, ஒரு தூசி, ஒரு துளி இந்த நரகத்தில்.
Aaru Tharagaigal/ஆறு தாரகைகள்- Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 450.00
ஹிந்துஸ்தானி இசையைப் பின்புலமாக வைத்து யுவன் சந்திரசேகர் எழுதும் மூன்றாவது நாவல் இது. இரண்டாவது நாவலான ‘நினைவுதிர் காலம்’ வெளியாகி, பதினொரு ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.
இசையே பின்புலம் என்றாலும், முந்தைய நாவல்கள் சித்தரித்த உலகம் வேறு; இதில் நிகழ்வது முழுக்க வேறு. அவற்றின் நாயகர்கள் ஆண்கள். இது ஆறு பெண் கலைஞர்களைப் பற்றியது.
முதலாவது நாவல் ‘கானல் நதி’ வாழ்க்கை வரலாறுபோல அமைந்தது. இரண்டாவது நாவலின் வடிவம், முழு நேர்காணல். இந்த நாவல், தனித் தனிக் குறுநாவல்களின் தொகுப்புபோல அமைந்திருக்கிறது. ஒன்றிலொன்று பிணைந்த குறுநாவல்கள்.
இசை பற்றிய எண்ணங்களும், இசை வழங்கும் அனுபவங்களும், அதில் ஈடுபட்ட தனிமனங்களின் அல்லாட்டமும் நிஜம்போன்றே விவரிக்கப்படும் புனைவு. அந்த அளவில், முந்தைய நாவல்களை நினைவூட்டும் உள்ளோட்டமும், இடம்பெறும் அனைவருமே பெண்கள் என்பதால் தனித்துவமான உள்ளடக்கமும் கொண்டது.
Stay up-to-date about new collections, events, discounts and more