கடந்த பத்து வருடங்களில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இவை. இவற்றை எழுதுவதற்கான சாராம்சம், அவை, அவற்றைப் பற்றி எழுத வைத்ததுதான். இலக்கியத்தை வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய சிறிய விவாதம் இத்தொகுதியில் உண்டு.
சமகால எழுத்துக்கான ஊடகங்கள் எப்படி எழுத்தாளனை வதம் செய்கிறது என்பதைப் பற்றிய கட்டுரையும் இத்தொகுதியில் அடக்கம். இடுப்பில் கட்டியிருந்த துண்டு, நம்மை மீறி நம் குரல் வளையைச் சுற்றி இருக்கிறது. நம்மை நாமே காலி செய்துகொள்வதற்கான கருவியாக இன்றைய டிஜிட்டல் ஊடகங்களை மாற்றியும் விட்டோம்.
இக்கட்டுரைகள் எழுதும்போது இருந்த மனோநிலை, ஒரு தொகுதியாக்கி வாசிக்கும்போது, இன்னும் நாம் போலி வித்தையிலிருந்து மாறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.