இருபத்தி இரண்டு சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த 'மற்றொருவன்'. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்களாக இங்கே நடமாடுகிறார்கள். இவற்றில் நாம் நம்மில் ஒரு பகுதியைக் கூட காண்போம். அது மறக்க முடியாது. இளமைக்காதல் அலமுவாக இருக்கலாம், தவறு ஒன்றைச் செய்துவிட்டு அதன் பாதிப்பால் அவதிப்படும் ஒருவனாக இருக்கலாம். அல்லது மற்றொருவன் போல் நமக்குள்ளும் வேறொருவன் ஒளிந்து இருக்கலாம். நகைச்சுவைக்கு காக்கைச் சிறகினிலே, பிழைப்பைக் கெடுக்கும் நினைப்பு, மட்டமாக சமைக்கும் கோமு போன்ற கதைகளும் உண்டு. திரில்லர் வகைக்கு கொலையுதிர் காலம்.பெண்களின் பிரச்சனைக்கும் சில கதைகள் உண்டு. அதே போல் ஆண்களின் பிரச்சனையையும் விட்டு வைக்கவில்லை. மொத்தத்தில் பல்சுவை கிடைக்கக்கூடிய சிறுகதைத் தொகுப்பு.
Sign up
Stay up-to-date about new collections, events, discounts and more