6 products
Oonvalarthaal Uyir Valarthaale/ஊன் வளர்த்தாள் உயிர் வளர்த்தாளே -Kutti revathi /குட்டி ரேவதி
Regular price Rs. 170.00
Noorayiram Sorkal/நூறாயிரம் சொற்கள் -Kutti Revathi/குட்டி ரேவதி
Regular price Rs. 100.00
இயக்கம்/Iyakkam- Kutti Revathi/குட்டி ரேவதி
ZDP 178
Regular price Rs. 140.00இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் பெண்ணிய கற்பனையின் உச்சம். பெண்ணின் இயக்கத்தை முதன்மையாக வைத்து வாழ்க்கையையும் உலகத்தையும்காலத்தையும் பரிமாணம் உணரமுடியுமானால், எல்லாமே வேறு வகையானவாழ்க்கையாகவும் பேரண்டம் கையளிக்கும் அற்புதங்கள் இன்னும் திடமானவையாகவும் காலத்தின் தளம் ஒவ்வொரு கணமும் தன் கைகளுக்குள் மலர்பவையாகவும் இருக்கக்கூடும். பெண் ஆண் இடையே சமத்துவத்தை அன்று, ஏற்றத்தாழ்வுகளற்ற வேறுபட்ட புரிதல்களை நோக்கி அழைத்துச் செல்லும் இயக்கத்தை முன்மொழியும் கதாபாத்திரங்களைத் தேடி நகரும் கதைகள் இவை. இயக்கங்களுக்குள் பெண் ஆணுக்குள் அடங்குபவை இல்லை, பாலியல் வெளிகளும்அரசியல் ஊக்கங்களும். குடும்பம், காதல், திருமணம், இரத்த உறவுகளுக்கு அப்பால்சமூக உறவுகளால் பிணைந்தெழும்பும் இயக்கத்தைத் தேடும் அறச்சுவடுகளால் ஆனப் பயணங்கள் கொண்டபவை.
நிறைய அறைகள் உள்ள வீடு (Niraya Araigal Ulla Veedu) - Kutti Revathi
ZDP127
Regular price Rs. 199.00நிறைய அறைகள் உள்ள வீடு
குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்பமான பல்வேறு இழைகள் ஊடாடும் புனைகதைகளால் இத்தொகுப்பு உருவெடுத்திருக்கிறது. ஒடுக்கப்படுதலின் துயரமும், தனிமையும் தோய்ந்த பெண் வெளியைக் கலைத்து கொண்டாட்டமானதோர் உயிர் வெளியைக் கட்டமைக்கிறது. அழகியலும் அரசியலும் இணைந்து முயங்கும் அலாதியான இரசவாதம் இது.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 154
Language: Tamil
விரல்கள் (Viralgal) - Kutti Revathi
ZDP126
Regular price Rs. 150.00யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள், கதைக்களத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை. பெண், ஆண் என்ற இரண்டு வெவ்வேறு சிந்தனை உயிரிகள் அல்லது பண்பாட்டு உயிரிகள் இணையும் நீரோட்டத்தில் ஏற்படும் சவால்களை, முரண்களை எதிர்கொண்டு வெல்லும் வழிகளை இக்கதைகள் கண்டறிந்து சொல்கின்றன. மிச்சமிருக்கும் நம்பிக்கைகள் இதுவரை இழந்த நம்பிக்கைகளை விட மேலானவை என்று முணுமுணுக்கின்றன. மனம் இயங்கும் தீவிரத் தளத்திலிருந்து எந்த நிர்ப்பந்தத்திற்காகவும் இல்லாமல் தாமே வெளியே வந்து குதித்த பூனைகளாய் இருக்கின்றன இக்கதைகள்.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 128
Language: Tamil
மீமொழி (Meemozhi) - Kutti Revathi
ZDP160
Regular price Rs. 135.00என் கதைமாந்தர்கள் யதார்த்த உலகில் திரிபவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் மீயதார்த்த வாதத்திற்கான நுண்மங்கள் எல்லாம் இயல்பு மனவெளியில் வித்தாகியவையே. இயல்புவாதத்திலிருந்து தன்னை அறுத்தறுத்துக் கொண்டு விடுபடும் தீவிர உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். புத்தெழுச்சியும் நுண்மொழியும் இக்கதைமாந்தர்களின் அகப்புலன்களாகி, வாழ்வின் போதாமையை புலன் கடந்து வெல்லப் பார்க்கின்றனர். ‘நிறைய அறைகள் உள்ள வீடு’, ‘விரல்கள்’, ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுக்குப் பின் இது என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 82
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more