340 products
340 products
340 products
Konashtai Padaippugal/கொனஷ்டை படைப்புகள்-தொகுப்பாசிரியர் -Rani Thilak/ராணி திலக்
Regular price Rs. 370.00
கொனஷ்டை இயற்பெயர் S.G. ஸ்ரீநிவாஸாச்சாரி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகிலுள்ள செருக்கை என்னும் சிறு கிராமமாகும். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலைமகள் இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஆர். சூடாமணி தனக்கான தமிழை இவ்வரிடமிருந்து பெற்றுள்ளார். தற்போது இவரின் இரண்டாம் புத்தகம் மட்டும் வந்துள்ளது. இத்தொகுதியில், கதை, கட்டுரை இடம் பெற்றுள்ளன. விரைவில் அவருடைய முதல் புத்தகம் வெளியாகும்.
இவர் மணிக்கொடி காலத்து எழுத்தாளராக கருதப்படுகிறார். ஹாஸ்யக் கதைகளை எழுதுவதில் சிறந்தவர்.
Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு -Tarun J Tejpal தருண் ஜே தேஜ்பால்
Regular price Rs. 600.00
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”
-ஆஷிஷ் நந்தி.
”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்
- வி.எஸ்.நய்பால்.
'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.'
- சஷி தரூர்
Poliga Poliga/பொலிக பொலிக-Pa. Raghavan/பா ராகவன்
Regular price Rs. 550.00
Poyithevu /பொய்த் தேவு - Ka.Na. Subramaniam/க .நா.சுப்பிரமணியம்
Regular price Rs. 260.00
Naanum en poonaikuttigalum/நானும் என் பூனைக்குட்டிகளும்-Dharani Rasendran/தரணி ராசேந்திரன்
Regular price Rs. 150.00
Aroo ariviyal sirukathaigal 2020/அரூ அறிவியல் சிறுகதைகள் 2020
Regular price Rs. 320.00
தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை அறிந்திராத உலகங்களைக் காண்பிக்கின்றது. அந்த வகையில் உள்ள 15 கதைகளும் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை.
சாரு நிவேதிதா
Aroo Ariviyal sirukathaigal 2019/அரூ அறிவியல் சிறுகதைகள் 2019
Regular price Rs. 280.00
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
-ஜெயமோகன்
மேற்கத்திய கிழக்கத்திய அறிவியல் புனைவுகள் வேறு மாதிரியானவை. இந்திய/ தமிழ் அறிவியல் புனைவு கிழக்கத்திய அறிவியல் புனைவின் திசையையே சரியாகத் தேர்கிறது என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.
-சுனில் கிருஷ்ணன்
Azhiyadha Regaigal/அழியாத ரேகைகள் -Sudha Murthy/சுதா மூர்த்தி-தமிழில் -Gayathri R/காயத்ரி ஆர்
300
Regular price Rs. 250.00சுதா மூர்த்தியின் 200வது புத்தகம் இது.
என் நண்பர்களின் கதைகளாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்தின், தெரிந்தவர்களின் கதைகளாக இருந்தாலும் சரி, என்னுடைய கதைகளில் நான் வியாபித்து இருப்பேன். ஏனென்றால் அதை அனுபவம் செய்தவள் என்ற முறையில் என்னை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எனக்குப் பிடித்த அழகான மலர்களைப் போல் இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கதைகளும் நான் மிகவும் போற்றும் அனுபவங்கள். இவை எல்லாவற்றையும் தொடுத்து ஒரு மாலையாக இங்கு கொடுத்திருக்கிறேன்.
Mudhal Kathai/முதல் கதை -(தொகுப்பாசிரியர்- லக்ஷ்மி சரவணகுமார் )
205
Regular price Rs. 150.00Naagavelvi/நாகவேள்வி -.S.Arulselvaperarasan/செ.அருட்செல்வப்பேரரசன்
204
Regular price Rs. 250.00Poonaikathai/பூனைக்கதை-Pa.Raghavan/பா .ராகவன்
200
Regular price Rs. 400.00திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது.
திரைப்படம் - தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல்.
இந்தக் கதையை ஒரு பூனை சொல்கிறது. அது இன்று வாழும் பூனையல்ல. என்றும் வாழும் பூனை. மாய யதார்த்த எழுத்தின் வசீகர சாத்தியங்களை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் இந்நாவல் விவரிக்கும் கலையுலகம் அசலானது. அரிதாரங்கள் அற்றது. இருண்மையின் அடியாழங்களில் பூனையின் கண் பாய்ச்சும் வெளிச்சம் உக்கிரமானது.
மதிப்பீடுகளின் தடமாற்றத்துக்கு எதிராக யுத்தத்துக்கு நிற்கும் பூனை ஒரு கட்டத்தில் நீங்களாகத் தெரிவீர்கள்.
ஆனால் அது நீங்களல்ல. நீங்கள் மட்டுமல்ல.
Iravaan/இறவான்-Pa.Raghavan/பா .ராகவன்
199
Regular price Rs. 350.00இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் எல்லாம் பேரண்ட வெடிப்பு உருவாகிறது.
பா. ராகவனின் ‘இறவான்', மிக நுணுக்கமான, முள் நேர்த்தியுடன் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு பெருங் கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை இதைவிடச் சிறப்பாக வேறெந்த நாவலும் படம் பிடித்ததில்லை.
Yathi/யதி-Pa.Raghavan/பா .ராகவன்
198
Regular price Rs. 1,000.00யதி அளவுக்கு ஒரு நாவல் சமீப காலத்தில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டதோ, கொண்டாடப்பட்டதோ, இல்லை. இதன் பிரம்மாண்டம், இது காட்டும் நாமறியாத பேருலகம், மெய்க்கூச்செரிய வைக்கும் சம்பவங்கள், அசலான மனிதர்கள், அசாதாரணமான தருணங்கள். எல்லாமே காரணம்தான். அனைத்தையும் விஞ்சியது இது தரும் தரிசனம்.
உலகில் ஒரு பாதமும் உணர்வின் உச்சத்தில் ஒரு பாதமும் பதித்து, உலகையும் உணர்வையும் கடந்து பிரபஞ்ச வெளியை நிறைக்கும் யோகிகளும் சித்தர்களும் நிறைந்த மாயப் பெருங்குகையின் கதவுகளை இந்நாவல் திறந்துவிடுகிறது.
இது நாம் அறியாததொரு உலகம். காலமற்றது. ஆனால் காலத்தை நிகர்த்த பிரம்மாண்டமானது. தகிப்பும் உக்கிரமும் நிறைந்தது.
யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டதொரு அசுர சாதனை.
Alagila Vilayattu-அலகிலா விளையாட்டு-Pa.Raghavan/பா. ராகவன்
196
Regular price Rs. 200.00பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன?
2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, 2004ம் ஆண்டு பாரா, பாரதிய பாஷா பரிஷத் விருது பெறவும் வழி வகுத்தது.
Idakaradakkal/இடக்கரடக்கல்-Vasumithra/ வசுமித்ர
195
Regular price Rs. 380.00Yuga Dharmam/யுக தர்மம் -Selvaraj Jegadeesan/செல்வராஜ் ஜெகதீசன்
193
Regular price Rs. 200.00Vaadatha Neelathamarigal/வாடாத நீலத் தாமரைகள் -Sathyanandan/சத்யானந்தன்
192
Regular price Rs. 230.00சிலிங்/Siling -கணேசகுமாரன்/Ganesakumaran
191
Regular price Rs. 110.00அல்லிக்கேணி/Allikeni-ராம்ஜீ நரசிம்மன்/Ramjee Narasiman
190
Regular price Rs. 270.00KADALIL ERINDHAVAI/கடலில் எறிந்தவை -யுவன் சந்திரசேகர்
189
Regular price Rs. 260.00…அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம்:
இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே.
இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன?
மனிதக் குழுக்களுக்கிடையிலான விரோதங்களில் கடவுள் எங்கே வந்தார்? பார்க் கப்போனால், இந்தமாதிரி உள்நாட்டு யுத்தங்களில், பாவம், அவர்தான் முதல் பலி ஆவார்...
அதிகாரி சிரித்தாராம்….
-’அடையாளம்’ கதையிலிருந்து.
VALAR KAATHAL INBAM/வளர் காதல் இன்பம்-கே .எஸ்.சுதாகர்
188
Regular price Rs. 130.00saabakumizh/சாபக்குமிழ் -ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
187
Regular price Rs. 120.00போர்க்குதிரை /PORKUTHIRAI-லக்ஷ்மி சரவணகுமார்
184
Regular price Rs. 260.00கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும் சமூகத்திற்கென கலைஞன் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். இலக்குகளை நோக்கி ஓடுகிறவர்களுக்கு லட்சியம் என்பது தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமில்லை என்பதைத் திரும்ப திரும்ப உணர்த்த வேண்டியுள்ளது. இலக்கிய வாசிப்புதான் இலக்குகளைத் துரத்தும் மனிதர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ’மனித செயல்பாடுகள் அனைத்தின் அர்த்தமும் கலைரீதீலான பிரக்ஞையில்தான் இருக்கிறது.’ என்னும் தார்க்கோவ்ஸ்கியின் கூற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஹாம்லெட்/Hamlet-William Shakespeare/வில்லியம் ஷேக்ஸ்பியர் -தமிழில் -Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன்
ZDP 181
Regular price Rs. 450.00பின்னணிப் பாடகர்/Pinnani padagar - Sureshkumara Indrajith/சுரேஷ்குமார இந்திரஜித்
ZDP 180
Regular price Rs. 140.00இயக்கம்/Iyakkam- Kutti Revathi/குட்டி ரேவதி
ZDP 178
Regular price Rs. 140.00இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் பெண்ணிய கற்பனையின் உச்சம். பெண்ணின் இயக்கத்தை முதன்மையாக வைத்து வாழ்க்கையையும் உலகத்தையும்காலத்தையும் பரிமாணம் உணரமுடியுமானால், எல்லாமே வேறு வகையானவாழ்க்கையாகவும் பேரண்டம் கையளிக்கும் அற்புதங்கள் இன்னும் திடமானவையாகவும் காலத்தின் தளம் ஒவ்வொரு கணமும் தன் கைகளுக்குள் மலர்பவையாகவும் இருக்கக்கூடும். பெண் ஆண் இடையே சமத்துவத்தை அன்று, ஏற்றத்தாழ்வுகளற்ற வேறுபட்ட புரிதல்களை நோக்கி அழைத்துச் செல்லும் இயக்கத்தை முன்மொழியும் கதாபாத்திரங்களைத் தேடி நகரும் கதைகள் இவை. இயக்கங்களுக்குள் பெண் ஆணுக்குள் அடங்குபவை இல்லை, பாலியல் வெளிகளும்அரசியல் ஊக்கங்களும். குடும்பம், காதல், திருமணம், இரத்த உறவுகளுக்கு அப்பால்சமூக உறவுகளால் பிணைந்தெழும்பும் இயக்கத்தைத் தேடும் அறச்சுவடுகளால் ஆனப் பயணங்கள் கொண்டபவை.
இதயநாதம் (Idhaya Nadham) - ந சிதம்பரசுப்பிரமணியன் / N Chidambarasubramanian
ZDP 177
Regular price Rs. 250.00இதயநாதம் திருவையாறு மற்றும் தஞ்சாவூரில் வாழ்ந்த ஒரு சங்கீத மேதையைப் பற்றிய நாவல். என்றாலும் அதனுடைய ஆதார சுருதி சங்கீதம் அல்ல; அகிம்சையும் சத்தியமும். "தஞ்சாவூரைச் சேர்ந்த தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணை பெருமாளையர், த்ஸௌகம் சீனுவையங்கார் போன்ற கலைஞர்களுக்கு நிகரான கீர்த்தி பெற்றவர் மகா வைத்தியநாதய்யர் (1944-93)" என்று சொல்கிறார் உ.வே.சா. மகா வைத்தியநாத சிவன் என்றும் அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டதே இதய நாதம்.
அழியாச்சொல் (Azhiyasol) - Kutti Revathi
ZDP 174
Regular price Rs. 290.00மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று
கொண்டேயிருக்கும், இடையறாத நனவெழுச்சி பொங்கிப்பெருகியோடும் ஒரு
கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல்லும்
எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய்
ஆழத்தில் எதிரொளிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு. பெண் உடல்பிம்பம்
உடைபடும் தருணங்களும், அதன் அடியில் இழுபடும் அறுந்திடாத அறத்தின்
கயிறுகளும் நூறாயிரம் அழியாச்சொற்களும் அவளை இடையறாது தனிமையின்
நதியாய் பாய்ந்திடத்தூண்டுகின்றன. ஒரு முறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க
முடியாத பேருவகை வாழ்க்கை. கதையினுள்ளே கதை என்று சுருள் சுருளாய்க்
கதைவெளிக்குள் அழைத்துச்செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீடே
அழியாச்சொல். “அழியாச் சொல்”, குட்டி ரேவதியின் முதல் நாவல்.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 228
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more