156 products
156 products
156 products
Boomerang/பூமராங்-Satyanandhan/சத்யானந்தன்
Regular price Rs. 220.00
Komora/கொமோரா -Lakshmi Saravanakumar/லக்ஷ்மி சரவணகுமார்
Regular price Rs. 500.00
Vendudhal/வேண்டுதல் /Jeganath Natarajan/ஜெகநாத் நடராஜன்
Regular price Rs. 100.00
Puthiran/புத்திரன் -Vasu Murugavel/வாசு முருகவேல்
Regular price Rs. 170.00
Kulla Chittan Sarithiram/குள்ளச் சித்தன் சரித்திரம் -Yuvan Chandrasekar/யுவன் சந்திரசேகர்
Regular price Rs. 330.00
Pazhi/பழி -Ayyanar Viswanth/அய்யனார் விஸ்வநாத்
Regular price Rs. 220.00
Oridhazh poo/ஓரிதழ்பூ -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்
Regular price Rs. 200.00
Rowell Theru Manidhargal/ரோவேல் தெரு மனிதர்கள் -Uma Kathir/உமா கதிர்
Regular price Rs. 220.00
Pudhuvayil oru Mazhaikkalam/புதுவையில் ஒரு மழைக்காலம் -Ayyanar Viswanath/அய்யனார் விஸ்வநாத்
Regular price Rs. 180.00
Mugamoodigalin Pallathaaku/முகமூடிகளின் பள்ளத்தாக்கு -Tarun J Tejpal தருண் ஜே தேஜ்பால்
Regular price Rs. 600.00
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”
-ஆஷிஷ் நந்தி.
”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்
- வி.எஸ்.நய்பால்.
'அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.'
- சஷி தரூர்
Poyithevu /பொய்த் தேவு - Ka.Na. Subramaniam/க .நா.சுப்பிரமணியம்
Regular price Rs. 260.00
Naanum en poonaikuttigalum/நானும் என் பூனைக்குட்டிகளும்-Dharani Rasendran/தரணி ராசேந்திரன்
Regular price Rs. 150.00
Poonaikathai/பூனைக்கதை-Pa.Raghavan/பா .ராகவன்
200
Regular price Rs. 400.00திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது.
திரைப்படம் - தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல்.
இந்தக் கதையை ஒரு பூனை சொல்கிறது. அது இன்று வாழும் பூனையல்ல. என்றும் வாழும் பூனை. மாய யதார்த்த எழுத்தின் வசீகர சாத்தியங்களை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் இந்நாவல் விவரிக்கும் கலையுலகம் அசலானது. அரிதாரங்கள் அற்றது. இருண்மையின் அடியாழங்களில் பூனையின் கண் பாய்ச்சும் வெளிச்சம் உக்கிரமானது.
மதிப்பீடுகளின் தடமாற்றத்துக்கு எதிராக யுத்தத்துக்கு நிற்கும் பூனை ஒரு கட்டத்தில் நீங்களாகத் தெரிவீர்கள்.
ஆனால் அது நீங்களல்ல. நீங்கள் மட்டுமல்ல.
Iravaan/இறவான்-Pa.Raghavan/பா .ராகவன்
199
Regular price Rs. 350.00இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் எல்லாம் பேரண்ட வெடிப்பு உருவாகிறது.
பா. ராகவனின் ‘இறவான்', மிக நுணுக்கமான, முள் நேர்த்தியுடன் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு பெருங் கலைஞனின் ஆழ்மனக் கொந்தளிப்புகளை இதைவிடச் சிறப்பாக வேறெந்த நாவலும் படம் பிடித்ததில்லை.
Yathi/யதி-Pa.Raghavan/பா .ராகவன்
198
Regular price Rs. 1,000.00யதி அளவுக்கு ஒரு நாவல் சமீப காலத்தில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டதோ, கொண்டாடப்பட்டதோ, இல்லை. இதன் பிரம்மாண்டம், இது காட்டும் நாமறியாத பேருலகம், மெய்க்கூச்செரிய வைக்கும் சம்பவங்கள், அசலான மனிதர்கள், அசாதாரணமான தருணங்கள். எல்லாமே காரணம்தான். அனைத்தையும் விஞ்சியது இது தரும் தரிசனம்.
உலகில் ஒரு பாதமும் உணர்வின் உச்சத்தில் ஒரு பாதமும் பதித்து, உலகையும் உணர்வையும் கடந்து பிரபஞ்ச வெளியை நிறைக்கும் யோகிகளும் சித்தர்களும் நிறைந்த மாயப் பெருங்குகையின் கதவுகளை இந்நாவல் திறந்துவிடுகிறது.
இது நாம் அறியாததொரு உலகம். காலமற்றது. ஆனால் காலத்தை நிகர்த்த பிரம்மாண்டமானது. தகிப்பும் உக்கிரமும் நிறைந்தது.
யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டதொரு அசுர சாதனை.
Alagila Vilayattu-அலகிலா விளையாட்டு-Pa.Raghavan/பா. ராகவன்
196
Regular price Rs. 200.00பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன?
2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, 2004ம் ஆண்டு பாரா, பாரதிய பாஷா பரிஷத் விருது பெறவும் வழி வகுத்தது.
UNIT 109/யூனிட் 109- Maya/மாயா
194
Regular price Rs. 240.00Vaadatha Neelathamarigal/வாடாத நீலத் தாமரைகள் -Sathyanandan/சத்யானந்தன்
192
Regular price Rs. 230.00சிலிங்/Siling -கணேசகுமாரன்/Ganesakumaran
191
Regular price Rs. 110.00அல்லிக்கேணி/Allikeni-ராம்ஜீ நரசிம்மன்/Ramjee Narasiman
190
Regular price Rs. 270.00VALAR KAATHAL INBAM/வளர் காதல் இன்பம்-கே .எஸ்.சுதாகர்
188
Regular price Rs. 130.00saabakumizh/சாபக்குமிழ் -ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
187
Regular price Rs. 120.00Fire Of Sumatra - C.R.Ramana Kailash
186
Regular price Rs. 250.00A massive red fire demon came fiercely, swallowing jungles and burping them out as smoke. It killed several lives on its way and separated a tigress from its three cubs.
The three-perspective story follows the lives of the three cubs, the separated mother and a team of environmentalists who relentlessly fight for restoring the pristine forests of Sumatra. The short novel unveils the pressures experienced by the Sumatran wilderness, including poaching network, deforestation, wildfires and human-animal conflicts. This is an engaging ride through the woods with tigers and humans as narrators. The gripping tale of the wild is filled with several aspects of conservation, environmentalism, optimism, survival and the tragedy behind the raging fire of Sumatra.
ஹாம்லெட்/Hamlet-William Shakespeare/வில்லியம் ஷேக்ஸ்பியர் -தமிழில் -Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன்
ZDP 181
Regular price Rs. 450.00அழியாச்சொல் (Azhiyasol) - Kutti Revathi
ZDP 174
Regular price Rs. 290.00மலையுச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச்சென்று
கொண்டேயிருக்கும், இடையறாத நனவெழுச்சி பொங்கிப்பெருகியோடும் ஒரு
கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளாய் மிதந்து செல்லும்
எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய்
ஆழத்தில் எதிரொளிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு. பெண் உடல்பிம்பம்
உடைபடும் தருணங்களும், அதன் அடியில் இழுபடும் அறுந்திடாத அறத்தின்
கயிறுகளும் நூறாயிரம் அழியாச்சொற்களும் அவளை இடையறாது தனிமையின்
நதியாய் பாய்ந்திடத்தூண்டுகின்றன. ஒரு முறை கால் வைத்த கணத்தில் மீண்டும் கால் வைக்க
முடியாத பேருவகை வாழ்க்கை. கதையினுள்ளே கதை என்று சுருள் சுருளாய்க்
கதைவெளிக்குள் அழைத்துச்செல்லும் இடையறா இயக்கத்தின் குறியீடே
அழியாச்சொல். “அழியாச் சொல்”, குட்டி ரேவதியின் முதல் நாவல்.
Author: Kutti Revathi
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 228
Language: Tamil
Pattakkadu/பட்டக்காடு-அமல்ராஜ் பிரான்சிஸ்/Amalraj Francis
ZDP 171
Regular price Rs. 599.00வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள் இதுவரை ஈழத்தில் மிகவும் சொற்பமாகவே வந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழ யுத்தத்தையும் அதனால் தமிழர்கள் கடந்து வர வேண்டியிருந்த பேரிடரையும் புறத்தேயிருந்து பார்த்து, அனுபவித்த ஒரு வரலாற்றுக் கண்ணாடியாக பட்டக்காடு இருக்கும்.
பட்டக்காட்டின் மூலக்கதை உண்மையான சம்பவங்களிலிருந்து கோர்க்கப்பட்டவை. அவற்றில் பல சம்பவங்களை நான் நேரடியாகவே அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறேன். இன்னும் சில இடங்களில் நானே அப்பாத்திரங்களாகவும் வாழ்ந்திருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அருகிலிருந்து பார்க்கும் வலி கொடியது. அதைப் பட்டக்காட்டின் பல பக்கங்கள் உங்களுக்கு உணர்த்தும்.
-அமல்ராஜ் பிரான்சிஸ்
Author: Amalraj Francis
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 494
Language: Tamil
மாக்பெத் (Macbeth) - William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
ZDP159
Regular price Rs. 350.00ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும், ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும், இதற்கு முன்பே ‘ஹாம்லெட்’ ‘லியர் அரசன்’ என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும், தமிழை இயல்பாக, லாவகமாக, உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள். இவற்றை ஆட்சியோடு கையாளுவதால், ‘மாக்பெத்’ என்ற இந்த நாடக மொழிபெயர்ப்பின் மூலமாக, ஷேக்ஸ்பியரின் இதயத்தை அவரால் தொட முடிகிறது.
ஷேக்ஸ்பியரை நேரிற்பயிலும் போது ஏற்படும் ஐயங்கள், இடர்பாடுகள், இவை ஏதுமின்றி தெளிந்த இன்றைய தமிழில் மகராஜன் தருகிறார். அவருடைய உதவியால் பழங்காலத்து ஸ்காட்லாண்டுக்குப் போகிறோம்; அங்கே உயிர்பெற்றுக் கண்முன்னே உலாவும் பாத்திரங்களோடு ஒட்டுகிறோம்; மனித உள்ளத்தின் விதவிதமான கதிகளை நாமே பயில்கிறோம்; அதன் பெருமையை, அதன் சிறுமையைக் காண்கிறோம். பிறகு பக்குவம் பெற்ற மனதோடு தினசரி வாழ்க்கைக்குத் திரும்புகிறோம். இத்தனைக்கும் துணை செய்யும் உலக மகாகவி ஒருவனோடு, கரவின்றி உறவாடும் கவிதைப் பயனைப் பெறுகிறோம். இதைச் சாத்தியமாக்கிய அறிஞர் மகராஜன் நமது நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்.
-பேராசிரியர் அ. சீநிவாசராகவன்
Author: William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 254
Language: Tamil
லியர் அரசன் (King Lear) - William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
ZDP124
Regular price Rs. 420.00தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…
ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக் கொண்டே இருக்கிறார்கள். புனிதமான இந்தப் பாத்திரங்களின் தெய்வீகப் பண்புகளும், சாந்த ரூபமான தியாக நிலைகளும் மங்களகரமான அமைதி நிறைந்த முடிவுகளும் மனித குலம் முழுவதையும் ஆசிர்வதிப்பது போலவும் அருள் பாலிப்பது போலவும் இருக்கின்றன.
லீயர் நாடகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது “அடடா, இப்படியெல்லாம் வாய்நிறைய எடுத்துச்
சொல்ல தமிழ் எத்தனை கோடி யுகங்களாய் தவம் இயற்றியதோ” என்று அதிசயித்துக் கொண்டே இருந்தேன்.
இத்தனை நூற்றாண்டுக் காலமாக மொட்டாக இருந்த தமிழ் அன்னை, மணத்தோடும் சுகத்தோடும் பூத்து விரிகிறாள். அப்படிப் பூத்து விரியச் செய்வது தங்களுடைய ஒய்யாரமான மந்திரச் சொற்களும், அந்தச் சொற்களை நெறிப்படுத்தி வைக்கிற மோகன நடையுமே ஆகும்.
– தமிழ் வித்வான் ல. ஷண்முகசுந்தரம்
Author: William Shakespeare - Translated By Justice Dr.S.Maharajan
Genre: Literature and Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 344
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more