248 products
248 products
248 products
Kaanamal pona Desangal/காணாமல் போன தேசங்கள்-Nirmal/நிர்மல்
Regular price Rs. 140.00
தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லாவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் போவது ஏன்?
இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகாணும் முயற்சியாக, உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன சில தேசங்களின் வரலாற்றையும், உலகின் ஆச்சரியமான சில தேசங்களின் வரலாற்றையும் பல நூல்களின் வாயிலாக அறிந்து, ஆராய்ந்து தெரிந்து கொண்டதன் மூலமாக உருவானதே காணாமல் போன தேசங்கள் என்கிற இப்புத்தகம்.
Nilamellam Ratham/நிலமெல்லாம் ரத்தம்-Pa Raghavan/பா .ராகவன்
203
Regular price Rs. 850.00இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல் பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப் பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்று வரை இது தீராதிருக்க என்ன காரணம்?
சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குப் பிற அரபு தேசங்கள் ஏன் கைகொடுப்பதில்லை? மத்தியக் கிழக்கின் வளமையும் செழுமையும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் ஏன் எப்போதுமே இல்லாமல் போகிறது?
ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்?
பாலஸ்தீன் போராளி இயக்கங்களின் தோற்றம் முதல் செயல்பாடுகள் வரையிலான விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது. யாசிர் அரஃபாத்தின் ஆயுதப் போராட்டம், அமைதி முயற்சிகள், அவற்றின் விபரீத விளைவுகள், இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் கண்ணோட்டம், உலக நாடுகளின் கருத்துகள் என்று விரிவான களப்பின்னணியுடன், ஆதாரபூர்வமான அரசியல் சரித்திரமாக எழுதப்பட்ட நூல் இது.
Dollar Desam/டாலர் தேசம்-Pa Raghavan/பா .ராகவன்
202
Regular price Rs. 1,000.00இது அமெரிக்காவின் அரசியல் வரலாறு.
அமெரிக்காவின் அரசியல் சரித்திரத்தை அறிந்துகொள்வதென்பது ஒரு வகையில் உலக சரித்திரத்தையே ஓர் அவசரப் பார்வை பார்ப்பதற்கு ஒப்பாகும். நல்ல விதமாகவும் மோசமான விதமாகவும் அமெரிக்கா உறவு கொண்ட தேசங்கள் அனைத்தின் அரசியல் நிலைமையையும் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளாமல் - அமெரிக்கா ஏன் அத்தேசங்களுடன் உறவு அல்லது குறைந்தபட்சம் தொடர்பு கொண்டது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம்.
தனக்கு லாபமில்லாத எந்த ஒரு தேசத்துடனும் அமெரிக்கா உறவு வைத்துக்கொண்டதில்லை; உள் நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதில்லை; யுத்தங்கள் தொடுத்ததில்லை என்பது அதன் சரித்திரம் முழுவதும் காணக் கிடைக்கும் உண்மை. இது தொடர்பாக, ஏராளமாகக் கிடைத்த ஆதாரங்களே இந்நூலின் மௌன அடித்தளம்.
டாலர் தேசம், குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடராக வெளியானது. தமிழில் மிக அதிகம் விற்பனையான, வாசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்ட அரசியல் பிரதி இதுவே.
Hitler/ஹிட்லர்-Pa Raghavan/பா .ராகவன்
201
Regular price Rs. 225.00விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர். உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர்.
தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான். ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.
Oil Regai-ஆயில் ரேகை-Pa.Raghavan/பா .ராகவன்
197
Regular price Rs. 250.00ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத் தீர்மானிப்பது யார்? பெட்ரோலியக் கச்சா எண்ணெய் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன விதங்களில் உபயோகமாகிறது என்பது தெரிந்தால் இதன் பின்னால் நடைபெறும் அரசியல் முழுவதுமாகப் புரியும்.
பெட்ரோலியப் பொருளாதாரத்தின், அதனை ஆளும் அரசியலின் அடி ஆழம் வரை ஊடுருவிப் புரிந்துகொள்ள உதவுகிறது இந்நூல். தமிழில் இத்துறை சார்ந்து இன்னொரு நூல் இதுவரை வந்ததில்லை.
நெஞ்சம் மறப்பதில்லை/Nenjam Marapathillai-Chithra Lakshmanan/சித்ரா லட்சுமணன்
ZDP 182
Regular price Rs. 340.00இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? ((Intha Unmayigal Yen Maraikkappadugirana?) - Raj Siva
ZDP48
Regular price Rs. 280.00உலக மர்மங்களில் மிகமுக்கியமானதொன்றாகக் கணிக்கப்படும், ‘பயிர் வட்டச் சித்திரங்கள்’ (Crop circle) மனிதர்களால், உருவாக்கப்படுகின்றனவா இல்லை மனிதர்களல்லாத வேறு ஏதோ, அமனித சக்தியினால் உருவாக்கப்படுகின்றனவா என்பதை, ‘இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?’ என்னும் இந்த நூல் ஆராய்கிறது. அதன் தொடர்ச்சியாக இவற்றை உருவாக்குவது வேற்றுகோள் வசிகளாக இருக்குமோ என்னும் சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு, வேற்றுகோள் வாசிகளின் இருப்பு உண்மையானதா என்பதையும் ஆராய்கிறது.
எந்தவொரு முன்முடிவும் இல்லாமல், தர்க்கரீதியான ஆதாரங்களைப் படிக்கும் வாசகர்களிடம் கொடுத்து, அவர்களையே இறுதி முடிவுக்கான இடத்திற்கும் கொண்டு செல்கிறது. படிக்கப் படிக்க ‘இப்படியும் இருக்குமா?’ என்ற வாசகர்களின் ஆவலை இந்நூல் மேலும் தூண்டிக்கொண்டேயிருக்கும்.
Author: Raj Siva
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 196
Language: Tamil
சக்ரவாகம் (Chakravagam) - N. Chidambara Subramanian
ZDP140
Regular price Rs. 190.00பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக் கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெய்விக உணர்ச்சி அடியேனுக்கு உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது உண்டாகிறது. காவிரி போன்ற ஒரு புண்ணிய நதியில் நீராட இறங்கும்போதோ, சிதம்பரம் கோயிலைப் போன்ற பேராலயத்தினுள் நுழையும்போதோ எத்தகைய சாந்தமும் தூய்மையும் மிகுந்த எண்ணங்கள் உண்டாகுமோ, அந்த எண்ணங்கள் உங்கள் கதைகளைப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு உண்டாகிவிடுகின்றன.’ – ந.சிதம்பரசுப்பிரமணியனுக்கு நா. பார்த்தசாரதி 1957-ல் எழுதிய கடிதத்தில்…
Author: N. Chidambara Subramanian
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 142
Language: Tamil
பாலை நிலப் பயணம் (Palai Nila Payanam) - Selventhiran
ZDP161
Regular price Rs. 120.00நான் நண்பர்களுடன் சென்ற ஆண்டு சென்ற பாலைநிலப் பயணம் நிலக்காட்சிகளால் ஆன ஒரு நினைவு. நாட்கள் செல்லச் செல்ல நாம் கண்ட நிலக்காட்சிகள் கனவென ஆகிவிடுகின்றன. அந்தப் பயணத்தில் செல்வேந்திரனும் உடன் வந்தார். அவ்வனுபவத்தை நூலாக பதிப்பித்திருக்கிறார். அப்பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநேர்ந்த பயணக்குறிப்புகளில் ஒன்று என்று சொல்வேன். செல்வேந்திரனின் தமிழ்நடை தொடர்வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் கொண்ட இதழியலாளனுடையது. துள்ளிச் செல்லும் சொற்கள், அழகிய ஒழுக்கு. தமிழின் முக்கியமான பயணக்குறிப்புகளில் ஒன்று – ஜெயமோகன்
Author: Selventhiran
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 92
Language: Tamil
வாசிப்பது எப்படி? (Vaasipathu Epadi) - Selventhiran
ZDP163
Regular price Rs. 125.00வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.
Author: Selventhiran
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 82
Language: Tamil
சிறுகதை- சிறுகதை குறித்த கட்டுரைகள் (Sirukathai - Sirukathia Kuritha Katturaigal) - S. Senthil Kumar
ZDP152
Regular price Rs. 330.00ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த்தங்களைத் தருகிறது. புதிய வாசிப்பின் தேவையை நேர்மையுடன் பரிசீலனை செய்கிறது.
தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகளின் சிறுகதை குறித்த கட்டுரை அடங்கிய நூல் இது. இக்கட்டுரைகளை வாசித்து, பிறகு, சிறுகதைகளை வாசிப்பவர்கள் ‘சிறுகதையை ஏன் வாசிக்க வேண்டும்?’ என மறுபரிசீலனை செய்யத் தொடங்கும் போது கிடைக்கும் வெளிச்சங்கள் அர்த்தப்பூர்வமானதாக மாறும்.
Author: S. Senthilkumar
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 296
Language: Tamil
அராஜகம் ஆயிரம் (Araajagam Ayiram) - Araathu
ZDP158
Regular price Rs. 200.00இங்கு பஞ்சர் போடப்படும் (Ingu Puncture Podappadum) - Araathu
ZDP137
Regular price Rs. 130.00உங்களுக்குப் பிடிக்காத பெண்ணை வீட்டில் கட்டி வைக்கப் பார்க்கிறார்கள் என்றால் ’என்ஃபீல்ட் புல்லட் வாங்கிக் கொடுத்தால் தான் கல்யாணம் பண்ணுவேன்’ எனச் சொல்லிவிடுங்கள். கழுத்துக்கு வந்தது என்ஃபீல்டோடு போய்விடும்.
Author: Araathu
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 90
Language: Tamil
வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்பு (Vetrulagavasiyin Diary Kurippu) - Charu Nivedita
ZDP94
Regular price Rs. 220.00சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் ஒரு பண்பாட்டுத் தனிமை கொண்ட அந்நியனின் பார்வையில் இச்சமூகத்தின் அபத்தங்களை விமர்சிக்கின்றன. அந்த வகையில் பொதுபுத்திக்கு எதிரான கலகக் குரல் என்று அவரைச் சொல்லலாம். அதே சமயம் இந்த வாழ்வின் கொண்டாட்டங்களையும் விநோதங்களையும் பெரும் குதூகலத்துடன் பதிவு செய்கிறது அவர் எழுத்து.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 150
Language: Tamil
ரெண்டாம் ஆட்டம் (Rendam Attam) - Charu Nivedita
ZDP42
Regular price Rs. 200.00“அழகியல் என்பது ஒரு மதம். முன்பு மனிதனைத் திருத்தி அவனை நல்லவனாகவும், தூய்மையானவனாகவும் ஆக்கும் பணியை மதம் செய்வதாகச் சொல்லி வந்தது. இன்று தமிழில் பல கலை இலக்கியக்காரர்கள் தாங்கள் மனித நேயத்தையும், தூய சிந்தனைக் கிளர்ச்சிகளையும் உருவாக்கி உன்னதமான மனிதன், உன்னதமான சமூகம், உன்னதமான உலகம் ஆகியவற்றை உருவாக்குவதாக நம்புகிறார்கள். எனவே தங்களது அழகியல் வீற்றிருக்கும் புனிதமான இடத்தில், அதைப் பழிப்பதாக எதுவும் நடப்பதை அவர்களால் சகிக்க முடிவதில்லை. தங்களது வாழ்வையே உன்னத அழகியலின்படி உன்னதப் படைப்புகளை உருவாக்கி உலகை உன்னதப்படுத்த அர்ப்பணித்துக் கொண்டிருப்பதாய் இவர்கள் நம்புவதால் தனிப்பட்ட முறையில் காயம்பட்டதாய் உணர்கிறார்கள். மதம் எப்படி கொலைக் கருவியாய் செயல்படுகிறதோ அதேபோல் அழகியலும் ஒரு கொலைக் கருவிதான் என்றால் அது இவர்களுக்குப் புரிவதுமில்லை; அதைச் சகிக்கும் ஆற்றலுமில்லை.”
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 136
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் மூன்று (Paluppunira Pakkangal – Part 3) - Charu Nivedita
ZDP43
Regular price Rs. 350.00“என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன்.”
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 256
Language: Tamil
அறம் பொருள் இன்பம் (Aram Porul Inbam) - Charu Nivedita
ZDP40
Regular price Rs. 350.00“நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம், புறம் இரண்டையும் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன். இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களினால் உருவாக்கப்பட்ட நான், பல நூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த மொழியின் கரையில் அமர்ந்திருக்கிறேன். கனவு, நனவு, நனவில் கனவு, கனவில் நனவு ஆகிய திசைகளின் வழியே காற்றில் மிதந்து என் மூதாதையரின் பாடலைக் கேட்கப் பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் உருவாகும் பித்தநிலையையே எழுத்து எனப் பெயரிட்டு சக மனிதனுக்கு வழங்குகிறேன்.”
Author: Charu Nivedita
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 262
Language: Tamil
பழுப்பு நிறப் பக்கங்கள்-பாகம் இரண்டு (Paluppunira Pakkangal – Part 2) - Charu Nivedita
ZDP39
Regular price Rs. 350.00கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 234
Language: Tamil
மெதுஸாவின் மதுக்கோப்பை/Medusaavin Madhukoppai - சாரு நிவேதிதா/Charu Nivedita
ZDP44
Regular price Rs. 350.00சாருவின் ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு...
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 246
Language: Tamil
திசை அறியும் பறவைகள் (Thesay Ariyum Paravaigal) - Charu Nivedita
ZDP45
Regular price Rs. 350.00இத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages:270
Language: Tamil
மழையா பெய்கிறது(Mazhaiya Peigiradhu) - Charu Nivedita
ZDP59
Regular price Rs. 280.00சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகளின் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை.
அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கோள்ளப் போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 194
Language: Tamil
கெட்ட வார்த்தை(Ketta Vaarthai) - Charu Nivedita
ZDP58
Regular price Rs. 340.00சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 324
Language: Tamil
இச்சைகளின் இருள்வெளி(Ichaigalin Irulveli) - Charu Nivedita
ZDP56
Regular price Rs. 150.00கேரளத்தை சேர்ந்த நளினி ஜமிலா தன் கதையை உலகிற்கு சொன்னபோது அது பாலியல் தொழிலாளிகள் உலகின் நேரடிக்குரலாக வெளிப்பட்டது.பாலியல் தொழிலாளர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாக மட்டுமே பார்க்கும் பாசாங்கான மனிதாபிமான பார்வைகளை நளினி ஜமிலாவின் குரல் கேள்விக்குள்ளாக்குகிறது.நளினி ஜமிலாவோடு சாரு நிவேதிதா நிகழ்த்திய இந்த உரையாடல் இருண்ட உலகின் அறியப்படாத மூலைகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.பாலியல் தொழிலாளிகள் பற்றி நிலவும் பொதுப்புத்தி சார்ந்த பிம்பங்களைத் தகர்கிறது.அந்த உலகத்தில் வாழும் ஒரு பெண்ணின் பிரச்சினைகளை அதற்குரிய மானுட கௌரவத்துடன் அணுகுகிறது இந்த உரையாடல்.
Author: Charu Nivedita
Genre: Others
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 114
Language: Tamil
அதிகாரம் அமைதி சுதந்திரம் (Adhigaram Amaithi Suthandhiram) - Charu Nivedita
ZDP54
Regular price Rs. 150.00நான் உங்களுக்கு அளிப்பது சிந்தனைகள் அல்ல; சிந்தனா முறை.அந்த சிதனா முறையின் நோக்கம் சுதந்திரம். சமூகம் உங்களை ஒரு கடவுளை, ஒரு தீர்க்கதரிசியை, ஒரு தத்துவத்தை, ஒரு கோட்பாட்டைப் பின்பற்றச் சொல்லுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்...யாரையும் எதையும் நம்பாதீர்கள். உங்களை நப்புங்கள். உங்களைப் மனதைத் தொடர்ந்து செல்லுங்கள். எந்த சிந்தனையும், அறநெறியும், போதனையும், சட்ட திட்டமும், ஒழுக்க பார்வைகளும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். இதுவே என் எழுத்தின் செய்தி.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 90
Language: Tamil
நாடோடியின் நாட்குறிப்புகள் (Naadodiyin Naatkuripu) - Charu Nivedita
ZDP53
Regular price Rs. 200.00ஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான்,” என்றார். உடனே துக்ளக் கேள்வி – பதிலில், “அவர்களுக்கென்ன… மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள்,” என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, “ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே!” என்றார். ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்படியும் ஒரு உறவு இருந்திருக்கிறது. -புத்தகத்திலிருந்து
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 156
Language: Tamil
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி (Shakesphearein Minnajal) - Charu Nivedita
ZDP82
Regular price Rs. 120.00சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதையின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறையைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்தியேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்வின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரங்களை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச் செல்கின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 94
Language: Tamil
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்-2 (Kananvu Cappucino Koncham Chatting -2) - Charu Nivedita
ZDP81
Regular price Rs. 300.001922-இல் காந்தியின் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. நீதிபதி தன் தீர்ப்பின் போது ”திலகர் மீதும் இதே பிரிவில்தான் ஆறு ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது; அதேபோல் உங்களுக்கும் ஆறு ஆண்டு தண்டனை” என்றார். உடனே காந்தி, “லோகமான்ய பால கங்காதர திலகர் பெயரோடு என் பெயரையும் சேர்த்து அவருக்கு அளித்த அதே தண்டனையை எனக்கும் தந்தது வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இதை விட சிறந்த கௌரவம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறி நீதிபதியைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் என் கண்கள் பனிக்கின்றன; நா தழுதழுக்கிறது. ஆனால் அந்த மாமனிதர் இன்று நமக்கெல்லாம் வெறும் பெயராகவும், காகங்கள் அமர்ந்து இளைப்பாறி கக்கா போகும் சிலையாகவும் மட்டுமே எஞ்சி விட்டார். எப்பேர்ப்பட்ட அவலம் இது!
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 244
Language: Tamil
கடவுளும் சைத்தானும் (Kadavulum Saithanum) - Charu Nivedita
ZDP84
Regular price Rs. 130.00சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை.
குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என
பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.
Author: Charu Nivedita
Genre: Non-Fiction
Publishing House: Zero Degree Publishing
No. Of Pages: 100
Language: Tamil
Stay up-to-date about new collections, events, discounts and more