# Nayagi 2025/நாயகி 2025 - மூன்று கருத்தரங்க உரைகள்

நம் சமூகத்தில் பெண்கள் கடந்து வந்திருக்கும் தூரம் அதிகம். தூரத்தைக் கடக்க அவர்கள் பட்ட பாடுகளும், அனுபவித்த துயரங்களும் அனேகம். அந்தக் கடினமான பயணத்தில் பல பெண்கள் வேலிகளுக்கு உள்ளிருந்தே செயற்கரிய செயல்களைச் செய்தனர். புயலின் நடுவே குழல் இசைப்பதைப்போல் அவர்கள் தங்கள் உணர்வுகளை எழுதினார்கள். மனதின் பாடல்களைப் பாடினார்கள். கரி படிந்த அடுப்பங்கரையில் அவர்களின் கதைகள் எழுதப்பட்டிருக்கலாம். நீர்க்குடங்களைச் சுமக்கும் வேதனையை உணராதிருக்க அவர்கள் பாடியிருக்கலாம். அந்தக் கதைகளும், பாடல்களும் வரலாறாகின.  
நினைவுகளின் தொகுப்பே வாழ்க்கை. (கடந்து போன) நிகழ்வுகளின் தொகுப்பே சரித்திரம். அந்தப் பெண்கள் தங்கள் நினைவுகளை நிகழ்வுகளாய் மாற்றினர். அந்த நிகழ்வுகள் சரித்திரம் ஆகின.  
நாயகி குழுவினர் தாங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளின் வழியே அந்த நினைவுகளை மீட்டெடுக்கின்றனர். நிகழ்வுகளை நினைவு கூர்கின்றனர். கடந்த காலங்களின் தடைகளையும், வலிகளையும் விவாதிப்பதன் வழியே இன்றைய தடைகளையும், வேலிகளையும் தகர்க்கும் வழியை ஆராய்கின்றனர். தங்களது முன்னோடிகளின் கதைகளைப் பேசுவதன் மூலமாக தங்கள் கதைகளைக் கூர் தீட்டிக் கொள்கின்றனர்.  
நினைவுகளை மீட்டுகையில் புதிய சிந்தனை பிறக்கிறது. சரித்திரத்தைப் புரட்டுகையில் புதிய சரித்திரம் உருவாகிறது.  
இதுவரை நிகழ்ந்த மூன்று நாயகி நிகழ்வுகளில் மீட்டப்பட்ட சிந்தனைகள், பேசப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இந்நூல். பழைமையைப் பேசுவதன் வழியே புதிய வெளிச்சத்தை உருவாக்கும் புத்தகம்.  
\- பாஸ்கர் சக்தி

## Details

- **Price:** 360.0 INR
- **Vendor:** Zero Degree Publishing
- **Type:** Books
- **Tags:** Nayagi, Non-Fiction, Tamil, எழுத்து பிரசுரம் ( Ezhuthu Pirasuram)

## Variants

| Variant | Price | Available |
|---------|-------|-----------|
| Default Title | 360.00 INR | In stock |

## Images

- Nayagi 2025/நாயகி 2025 - மூன்று கருத்தரங்க உரைகள்

---

> Source: [Zero Degree Publishing](https://zero-degree-publishing-1.myshopify.com/products/nayagi-2025-நாயகி-2025-மூன்று-கருத்தரங்க-உரைகள்)
> Updated: 2026-05-09
